தண்டகாரண்யத்தில் சீதை- இமையத்தின் சிறுகதை நூல் வெளியீடு

சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு
சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு
Published on

இமையம் எழுதிய ‘தண்டகாரண்யத்தில் சீதை’  என்ற புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா நகரில் உள்ள ‘டவர் பார்க்’ திறந்த வெளி அரங்கில் நடந்த இந்நிகழ்வில் முனைவர் சண்முகம் இ.ஆ.ப,  கவிஞர் மனுஷ்யபுத்திரன்,  ஊடகவியலாளர் மு.குணசேகரன், நாடக இயக்குநர் பிரசன்னா ராமசாமி, காவல்துறை துணை ஆணையர் வேல்முருகன், எஸ்.சி எஸ்டி ஆணைய உறுப்பினர் முனைவர் ஆனந்தராஜ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு
சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு

அண்ணா நகர் பூங்காவில் செயல்படும் டவர் ரீட்ஸ் என்கிற வாசிப்புக் குழுமத்தை சேர்ந்தவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

நிகழ்வில்  பிரியர்தர்ஷினி வரவேற்புரை நிகழ்த்தினார். தண்டகாரணயத்தில் சீதை சிறுகதையை  காமாட்சி வாசித்தார். அடங்காத அழுகை என்ற சிறுகதையை லோகேஷ் வாசித்தார். இமையத்தின் சிறுகதைகள் தரும் வாசிப்பனுவம் பற்றி கவின்குமார் உரையாற்றினார்.  கிருஷ்ணகுமார் நன்றியுரை கூறினார்.

சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு
சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு

நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இமையத்தின் சிறுகதைகள் பற்றி உரையாற்றினார். வாசகர்களின் கேள்விகளுக்கு இமையம் பதிலளித்தார். ஏராளமான வாசகர்களும் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com