13 முறை எஸ்.ஐ.ஆர். நடந்துள்ளது… திமுகவுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

இந்தியாவில் 13 முறை எஸ்ஐஆர் நடந்திருப்பதாக திமுகவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை முதலிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கு பலன் தந்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் எஸ்.ஐ.ஆர் செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. இறந்தவர்களை பட்டியலில் வைக்கலாமா? அல்லது வெளியூர் சென்றவர்கள் ஓட்டு பட்டியலில் இருக்கலாமா? என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்கிறது.

நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது நடந்த எஸ்.ஐ.ஆர் தவறாக தெரியவில்லையா? 2000ஆம் ஆண்டுக்கு பிறகு 4 முறை எஸ்.ஐ.ஆர் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிரச்சினை இல்லையா? 2000க்கு முன்பு 10 முறையும், அதற்கு பிறகு 3 முறையும் எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது. 13 முறை எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தபோதும் எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது.

ஒவ்வொன்றாக குறை கூறியவர்கள், இப்போது எஸ்.ஐ.ஆர் தவறு எனக்கூறுகிறார்கள். என்ன காரணத்துக்காக இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் எனத்தெரியவில்லை? ஆட்சியின் தவறுகளை மறைக்க, மக்களை ஏமாற்ற, மக்களவை மடைமாற்றும் முயற்சி இது.

தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் தோல்வி உறுதி என தெரிந்தால், ராகுல் காந்தி வாக்கு திருட்டு என்கிறார். பாஜக வென்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறை; அவர்கள் வென்றால் கிடையாது.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com