
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையயிருந்த நிலையில், தற்போது டிச. 14 ஆம் தேதி நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் டிச. 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் படிவத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிக்காக, தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.