தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்கோப்பகப் படம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி; மாணவிகள் 5.95% கூடுதல்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம்போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களின் தேர்ச்சிவீதம் 94.53%!

தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 94 ஆயிரத்து 264. இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,18,743 பேர்.

பெண் மாணவர்களில் 94.53% பேரும், ஆண் மாணவர்களில் 88.58% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சிவீதத்தைப் பொறுத்தவரை

அரசுப் பள்ளிகள் 87.9%,

அரசின் உதவிபெறும் பள்ளிகள் 91.77%,

தனியார் பள்ளிகள் 97.43% என அமைந்துள்ளது.

இருபாலர் பள்ளிகளில் 91.93% பேரும்,

பெண்கள் பள்ளிகளில் 93.8% பேரும்,

ஆண்கள் பள்ளிகளில் 83.17% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4,105. இதில், அரசுப் பள்ளிகள் மட்டும் 1,364 என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com