வைரமுத்துவின் மகா கவிதை நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மைய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
வைரமுத்துவின் மகா கவிதை நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மைய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

ஸ்டாலின் வைத்த கோரிக்கை: ஏற்றுக்கொண்ட வைரமுத்து!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாற்றை கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் எழுத வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதை வைரமுத்து ஏற்றுக்கொண்டார்.

சென்னை காமராஜர் அரங்கில் வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்னும் நூல் வெளியீட்டு விழா நேற்று மாலையில் நடைபெற்றது.

இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை முதலிய பலரும் பேசினர்.

ஸ்டாலின் பேசுகையில், “முக்கியமான காலகட்டத்தில் வைரமுத்து அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். அவரின் மொழி ஆளுமை இந்த நூலில் வெளிப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் வரலாற்றை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அவரின் தமிழில் கவிதையாக எழுத வேண்டும். ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை. இன்னும் சொல்லப்போனால் எனது கட்டளை.” என்றார்.

“கவிஞர் வைரமுத்து தொடர்ந்து புத்தகங்களை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை நான் தொடர்ந்து வெளியிட்டு கொண்டே இருக்க வேண்டும். படைப்பு, புத்தகத்தைத் தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார். மிக முக்கியமான காலகட்டத்தில் வைரமுத்து அவர்கள் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

மழை பற்றி அவர் சொல்லும் கவிதையில், திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை என்கிறார். இதைத்தான் நாம் சில வாரங்களுக்கு முன் பார்த்தோம். சென்னையாக இருந்தாலும், நெல்லையாக இருந்தாலும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை பெய்யும் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை. ஏரி உடைந்து கொட்டியது போல் வானம் உடைந்து கொட்டி மழை பெய்துள்ளது. நூறு ஆண்டில், பெரிய மழை என்று சொல்கிறோமே தவிர இதற்கான காரணங்களைச் சொல்லவில்லை. ஆனால் உண்மையான காரணங்களை இந்த நூலில் வைரமுத்து சொல்லிவிட்டார்.” என்று முதலமைச்சர் பேசினார்.

ஏற்புரை ஆற்றிய வைரைமுத்து, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் காவியம் எழுத சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறார். அரசாங்கம் போட்ட ஆணையை ஒரு ஏழை மாற்ற முடியுமா? எனவே உங்கள் கட்டளையைஏற்றுக்கொண்டு செய்வேன். இந்தக் கவிதை எழுதுவது என்பது கரும்பு தின்பது மாதிரி. கலைஞரைப் பற்றி எழுதுவதற்கு நான் யாரிடமும் மூலப்பொருள் கேட்பதில்லை. அதற்கு நெஞ்சுக்கு நீதி ஒன்றே போதும். அப்படி இல்லையெனில், முதலமைச்சரைத் தனியாக சந்தித்துப் பேசுவேன். கலைஞரின் எழுதாத, பேசாத, பார்க்காத பக்கங்களை சொல்லச் சொல்லிக் கேட்பேன். நெஞ்சுக்கு நீதி எழுத்து. இது (மு.க.ஸ்டாலின்) உயில். இந்த இரண்டும் இருந்தால் போதும் கலைஞர் காவியம் எழுதிவிடலாம்.” என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com