செல்லூர் ராஜூ - ராகுல் காந்தி
செல்லூர் ராஜூ - ராகுல் காந்தி

ராகுல்காந்தியைப் புகழ்ந்து செல்லூர் ராஜு திடீர் ட்வீட் - என்ன காரணம்?

காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தியை, ’நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிந்த நிலையில், இரண்டு கட்சிகளும் தனித் தனியாக தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக தி.மு.க. தொடர்ந்து கூறிவந்த நிலையில், பா.ஜ.க.வையோ காங்கிரஸ் கட்சியையோ அ.தி.மு.க. கடுமையாக எதிர்த்துப் பேசவில்லை.

இந்த நிலையில், செல்லூர் ராஜு தன் எக்ஸ் பக்கத்தில், ராகுல் காந்தி மக்களிடம் இயல்பாக பேசும் ஒரு காட்சியைப் பகிர்ந்துள்ளார். அத்துடன், “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்லூர் ராஜூ ஏன் இந்தப் பதிவைப் போட்டார் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

செல்லூர் ராஜூவின் பதிவு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டதற்கு, “செல்லூர் ராஜூ எப்போதும் காங்கிரஸ் மீது அபிமானம் உள்ளவர். பா.ஜ.க.வில் இருக்கக்கூடிய முற்போக்குவாதிகள்கூட ராகுலை நேசிக்கிறார்கள். பா.ஜ.க.வில் இருப்பவர்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். இந்த உலகமே இராகுலைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது. காந்தி, இந்திராவுக்குப் பிறகு நம்பிக்கையளிக்கக் கூடியவராக அவரை உலகத் தலைவர்கள் கருதுகிறார்கள். செல்லூர் ராஜு உண்மையைச் சொல்லியிருக்கிறார்.” என்று அவர் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com