“திமுக உடன் கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை...!"

Selvapperunthagai, TNCC president
செல்வப்பெருந்தகை
Published on

திமுக உடன் எந்த கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக – காங்கிரஸ் இடையே நடைபெற்று வரும் கருத்து மோதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை , “திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடோ முரணோ கிடையாது. கூட்டணி கட்சிகள் நினைப்பதை முதலமைச்சர் கொடுப்பார். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். கூட்டணி குறித்து மாநில தலைவர் நானே பேசுவதில்லை, அதை காங்கிரஸ் தலைமை தான் முடிவெடுக்கும்.

கூட்டணிக்கு எதிராக பேசுபவர்களை காங்கிரஸ் தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தலைவர்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com