"அடுத்த தலைமுறைக்கான அரசு இது..” - விஜய் சேதுபதி பேச்சு

நடிகர் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி
Published on

“திமுக அரசு நீண்ட காலமாகவே நம் அனைவரையும் படிக்க வைக்க திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிக வழங்கும் “உலகம் உங்கள் கையில்” எனும் திட்டத்தின் தொடக்க விழா மாலை நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த அரசு நீண்ட காலமாகவே நம் அனைவரையும் படிக்க வைக்க திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. வேறு எதையும் கொடுப்பதைவிட நமது அடுத்த தலைமுறைக்கு கல்வியை வழங்குவது எவ்வளவு அவசியம் என்றால், ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அந்தத் தலைமுறையும், அந்தக் குடும்பமும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கின்றன. அதற்கான மிக முக்கியமான பங்கை இந்த அரசு மீண்டும் மீண்டும் ஆற்றிக் கொண்டே இருக்கிறது. அதற்கு முதல்வருக்கு நன்றி.

ஒருவரின் வளர்ச்சி என்பது அவருக்குக் கிடைக்கும் அறிவின் மூலம்தான் முன்னேறிச் செல்கிறது. அதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல அரசு பெரும்பங்கு வகிக்கிறது. அதற்கு முதல்வருக்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com