காங். நிர்வாகி இடைநீக்கம்- விஜய் கட்சியுடன் பேசியதா காரணம்?

காங். நிர்வாகி இடைநீக்கம்- விஜய் கட்சியுடன் பேசியதா காரணம்?
Published on

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துவந்த டி. செல்வம் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தரப்பு முன்னதாக விஜய் தலைமையிலான த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதாகப் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ப காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தொட்டும்தொடாமலும் பேசிவந்தனர்.

இதனிடையே, த.வெ.க. தரப்பில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தங்களுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் முதலிய நிர்வாகிகள் பேசிவருவதாக மீண்டும் வெளிப்படையாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, யாரெல்லாம் த.வெ.க.வுடன் பேசியவர்கள் என காங்கிரஸ் கட்சியில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், செல்வம் பேசியது தெரியவந்தது.

இந்த நிலையில், அவரைக் கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செல்வம் மீதான விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com