ராகுல் பேசியது காதில் விழவில்லை- செல்வப்பெருந்தகை சொல்லும் காரணம்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த மாதம் நடைபெற்ற பிரச்சாரத்தில் இராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தார். அப்போது இராகுலின் பேச்சுக்கும் மொழிபெயர்ப்புக்கும் தொடர்பே இல்லாமல் கேட்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. அது குறித்து அவருடைய கட்சியினருமேகூட சமூக ஊடகங்களில் விமர்சனத்தை முன்வைத்தனர். 

தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு, “ இராகுல் காந்தி சற்று தொலைவில் இருந்ததால் அவர் பேசியது எனக்கு சரியாகக் காதில் விழவில்லை. மேலும், நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். கான்வெண்ட் பள்ளியில் படிக்கவில்லை.” என்று பதில் அளித்தார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறியிருந்த நிலையில், அதைப் பற்றி கேட்டதற்கு, வேறு நல்ல கேள்வியே இல்லையா எனக் கூறிவிட்டு நகர்ந்தார் செல்வப்பெருந்தகை.  

logo
Andhimazhai
www.andhimazhai.com