தமிழ் நாடு
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான வழக்கை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றுக்கொண்டார்.
கடந்த ஆட்சியில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற கோப்பை அண்ணாமலை வெளியிட்டார். அதில் பாலு கோடிக்கணக்கில் சொத்து குவித்ததை முக்கியமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதற்கு எதிராக பாலு 100 கோடி ரூபாய் மான நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அண்ணாமலை தனக்குத் தானே வாதாடினார்.
விசாரணை தொடர்ந்துவந்த நிலையில், திடீரென அண்ணாமலை மீதான வழக்கை பாலு திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அரசியல் மாற்றங்களில் இது இணைத்துப் பேசப்படுகிறது.