முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நீட் ஊழலிருந்து தப்பிக்க முயற்சி! – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் திறமையின்மையைக் காட்டுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் இன்று பதிலளித்த தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண்ணை ரத்து செய்வதாகவும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் விளக்கம் அளித்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

”நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் திறமையின்மையைக் காட்டுகிறது. கருணை மதிப்பெண் ரத்து மூலம் சமீபத்திய நீட் ஊழலிலிருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அவர்களின் திறமையின்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திறமையின்மையைக் கண்டிக்கும் அதேவேளையில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும். அதுவே இந்த பிரச்னைக்குத் தீர்வு.” என்று முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com