வைகோ நடைபயணம்: காங்கிரஸ் திடீர் புறக்கணிப்பு- என்ன காரணம்?

வைகோ - செல்வப்பெருந்தகை
வைகோ - செல்வப்பெருந்தகை
Published on

திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சி திடீரெனப் புறக்கணித்துள்ளது.

திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ சமத்துவ நடைபயணத்தை இன்று காலை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

இந்த தொடக்க விழா திருச்சி தென்னூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், தி.க. வீ.குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது.

இந்த அழைப்பிதழின் முகப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோவின் நடைபயண தொடக்க விழாவை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com