
அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது.
அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்
8 அறிவிப்புகள்:
1. அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.
2. வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு, அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும்.
3. வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.
4. ‘Spiritual Alchemy’ என்ற வள்ளலாரின் புத்தகம் அறநிலையத்துறையின் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
5. வள்ளலார் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.
6. மேட்டுக்குப்பம், மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்.
7. கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அமைய உள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும். சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படும்.
8. சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.