தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலகம் முறைப்படி இன்று அறிவிப்பை வெளியிட்டது. 

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் மயங்கிவிழுந்த புகழேந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் காலையில் மருத்துவமனையில் அவர் காலமானார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com