தமிழ் நாடு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நாளை காங்கிரஸ் தரப்பில் பேசுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தொகுதிப் பேச்சுவார்த்தை முடிந்தால் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை தமிழகத்துக்கு அழைத்துவரத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
தில்லியில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தி.மு.க. தலைவருக்கு உடனடிக் கோரிக்கை பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவேண்டும். இதுதொடர்பாக மேலிடத் தலைவர்களுக்கு வருத்தம் உள்ளது.” என்றும் அவர் கூறினார்.
” பேச்சுவார்த்தை நடத்தாததால் எங்களுடைய செயற்பாடுகள் தடைபடுகின்றன. எங்களுக்கு அதிருப்தி எனக் கூறமுடியாது. சீக்கிரம் அது நடக்கவேண்டும்.” என்றும் செல்வப்பெருந்தகை சொன்னார்.