தீவுத்திடல்
தீவுத்திடல்

ரூ.104 கோடியில் சென்னை தீவுத்திடல், ரூ.100 கோடியில் கடற்கரைகள் மாற்றியமைப்பு!

சென்னை, கோட்டைக்கு அருகில் உள்ள தீவுத்திடல் பகுதியை 104 கோடி ரூபாய் செலவில் மாற்றியமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. 

இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பு விவரம்: 

”சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்புரப் பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகள் 104 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.

சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர். சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்ப்புர பசுமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும்.”

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com