விஜய் படத்துக்கு ராகுல் திடீர் ஆதரவு!
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பிரச்னை உச்சநீதிமன்றம்வரை போய் நிற்கிறது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அரசியல்ரீதியாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தி.மு.க.தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் எதிர் அணியில் இருந்தபோதும் விஜய்யின் படத்துக்குத் தணிக்கையை முடிக்காமல் இழுத்தடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. அணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிகமாகவே ஜனநாயகன் படத்துக்காகக் குரல் கொடுத்துவருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, விஜய் படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஜனநாயகன் படத்துக்குத் தடைவிதிக்க முயல்வது தமிழ்ப் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றும் தமிழ் மக்களின் குரலை நசுக்குவதில் பிரதமர் மோடி வெல்லவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

