செய்திகள்
ஈரான் அணுசக்தி உற்பத்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை வலை பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''சவுதி அரேபியாவின் சகோதர நாடான ஈரானின் சமீபத்திய நிலையை கவனித்து வருகிறோம். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் கவலை அளிக்கிறது.
பதற்றத்தைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தீவிரமான சூழலைத் தணிக்கும் நோக்கத்தில், அரசியல் ரீதியில் தீர்வு காணவும், போரைத் தவிர்க்கவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்'' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.