வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அமெரிக்காவின் அனைத்து படைகளையும் ஈராக்கிலிருந்து திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈராக் பிரதமர் அலி அல் சாயிதியும் அவரும் இதைக் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கிய அமெரிக்காவின் 23 ஆண்டுகால ராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது.
ஈராக் அதிபர் மிகப்பெரிய அழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி 2003ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அரசு அந்நாட்டின் மீது படையெடுத்தது.
பின்னர் அத்தகைய ஆயுதங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், ஈராக் அதிபர் சதாம் ஹூசைனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவரையும் கொலைசெய்தனர்.
அதன்பிறகு பல ஆண்டுகளாக உள்நாட்டு வன்முறை, தீவிரவாதத்தால் ஈராக் பாதிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவப் படைகள் ஈராக்கிற்கு உதவி வந்த நிலையில், 2011ஆம் ஆண்டு, பெரும்பாலான அமெரிக்கப் போர் படைகள் வெளியேறின.
கடந்த 2014ஆம் ஆண்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஈராக், சிரியாவில் வேகமாக வளர்ந்ததால், ஈராக் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கா மீண்டும் படைகளை அனுப்பியது.
ஈராக் படைகளுக்குப் பயிற்சி அளித்தல், உளவுத்தகவல்களை வழங்குதல், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல் ஆகிய பணிகளை அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வந்தன.
அமெரிக்கா - ஈராக் இடையே கடந்த 2024ஆம் ஆண்டு, ஈராக்கின் பாதுகாப்புப் படைகள் வலுவடைந்துவிட்டதாலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறைந்துவிட்டதாலும் அமெரிக்க ராணுவத்தின் பணி நிறைவடைந்ததாக இரு நாடுகளும் கையெழுத்தானது.
அதன்படி, அமெரிக்கப் படை ஈராக்கைவிட்டு தற்போது முழுமையாக வெளியேறுகிறது.
இருப்பினும், அமெரிக்கா - ஈராக் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.