கோல்மழை பொழிந்த ஜெர்மனி, சுவீடன்!

கியூரசாவ் அணியை வீழ்த்திய ஜெர்மனி அணி.
கியூரசாவ் அணியை வீழ்த்திய ஜெர்மனி அணி.
Published on

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் குரூப் இ, எப் பிரிவுகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன.

குரூப் இ பிரிவில் பலம் மிகுந்த ஜெர்மனி அணி, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு முதன்முதலாக தகுதிபெற்றுள்ள கியூரசாவ் அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் நிமிச்சும், கியூரசாவ் வீரர் லிவனோ கமெனிசியாவும் தலா 1 கோல் அடித்தனர். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இருந்தன.

சிறுது நேரம் கழித்து, தனது கோல் மழையைத் தொடங்கிய ஜெர்மனி அணி, 6 கோல்களை அடித்து அசத்தியது. கோல் அடிக்கப் போராடிய கியூரசாவ் அணியின் முயற்சியை ஜெர்மனி அணி வீழ்த்தி 7-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது.

அடுத்து, குரூப் எப் பிரிவில் இருக்கும் நெதர்லாந்து , ஜப்பான் இடையிலான போட்டி 2-2 என்ற புள்ளிகளுடன் டிராவில் முடிந்தது.

‘இ’ பிரிவில் உள்ள ஐவரிகோஸ்ட், ஈகுவடார் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில், கடைசி நிமிடத்தை நெருங்கும் தறுவாயில் ஐவரிகோஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் அமாத் டியாலோ கோல் அடித்தார்.

இதனால், ஐவரிகோஸ்ட் அணி போட்டியை வென்றது.

அடுத்து ‘எப்’ பிரிவு அணிகளான சுவீடன், துனிசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சுவீடன் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்டத்தில், 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன், துனிசியா அணியின் புள்ளிகள் இருந்தன.

பின்னர், இரண்டாம் பாதியில் தனது கோல் எண்ணிக்கையை உயர்த்திய சுவீடன் அணி 5-1 என்ற புள்ளி கணக்கில் துனிசியாவை வீழத்தி அபாரமாக வென்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com