
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் நெத்தன்யாகு தலைமையிலான ஆளும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு 120 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 53 இடங்களே கிடைத்தன. 61 பேர் என்ற எண்ணிக்கை இருந்தால்தான் அங்கு அரசு அமைக்கமுடியும்.
முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்கள் பெற்றுள்ளது.
அராபியர்களின் கட்சிகளும் இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்று 19 இடங்களைப் பிடித்தன.
அராபியர்களின் கட்சிகள் தீவிர வலதுசாரியான நெத்தன்யாகுவுக்கு எதிராகவே இருப்பதால் அவருக்கு எதிரான எம்பிகள் எண்ணிக்கை இப்போது நெஸ்ஸெட்டில் ( இஸ்ரேல் நாடாளுமன்றம்) 67 ஆக உள்ளன.
ஈரான் நாட்டின் அச்சுறுத்தல் இருப்பதால் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைப்போம் என்ற நெத்தன்யாகுவின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் உதாசீனப் படுத்திவிட்டன. அத்துடன் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப் மண்ணைக் கவ்வியதால் இஸ்ரேலில் அவரால் நெத்தன்யாகுவுக்கு எந்த உதவியும் செய்யமுடியவில்லை. நெத்தன்யாகுக்கு முதலில் ஆதரவாக இருந்த 7 எம்பிக்கள், தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ள, அவரது எண்ணிக்கை 46 ஆக குறைந்துவிட்டது.
இதை அடுத்து இஸ்ரேலிய குடியரசுத் தலைவர் ஐசக் ஹெர்சாக், எதிர்க்கட்சித் தலைவரான ஐசன்கோட்டை ஆட்சி அமைக்குமாறு அழைத்துள்ளார். ஆறு வாரத்துக்குள் அவர் தன் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கவேண்டும்.
அராபியர்களின் கட்சி உறுப்பினர்கள் ஆதரவும் இருப்பதால் ஐசன்கோட் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது என்றே கருதப்படுகிறது. 19 ஆண்டுகள் ஆட்சி செய்த நெத்தன்யாகுவின் அதிகாரம் இத்துடன் முடிவுக்கு வரலாம்.