
பாகிஸ்தானில் கடந்த 21 மணி நேரமாக நடைபெற்ற ஈரான் அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவு பெற்றது. இதையடுத்து தங்களது குழு அமெரிக்கா திரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவித்தார்.
ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார தற்காலிக போர் நிறுத்தம் தற்போது அமலில் இருந்துவருகிறது. இதையடுத்து பாகிஸ்தான் ஏற்பாட்டில் அந்நாட்டின் தலைநகரில் ஈரான் அமெரிக்க பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். இருதரப்பின் சார்பிலும் கருத்துகள் ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனாலும் எந்தவித ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
அமெரிக்கா, ஈரான் எந்நிலையிலும் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ கூடாது என்பதை வலியுறுத்துகிறது, அதற்கான உறுதியை எதிர்பார்க்கிறது. ஆனால் ஈரான் அதை ஏற்பதாக இல்லை. பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார தடைகள், அணு சக்தி உள்ளிட்ட விஷயங்களில் பேச்சுவார்த்தை முன்னேறவில்லை என ஈரான் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.