மீண்டும் வேதாளம்... 50% வரி என டிரம்ப் அறிவிப்பு!

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
Published on

ஈரான் போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதன் சத்தம்கூட ஓயாதநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு வரி மிரட்டலை விடுத்திருக்கிறார்.  

ஈரானுக்கு ஆயுத உதவிகள் செய்யும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்பது அவருடைய இப்போதைய அறிவிப்பு ஆகும்.

அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையில் பாகிஸ்தான் சமாதானப் பேச்சை ஏற்பாடு செய்து ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாகிஸ்தானில் இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஈரான் நாடாளுமன்ற அவைத்தலைவர் காலி பாப், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் நாளைமறுநாள் 10ஆம் தேதி சந்தித்துப் பேசுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பாகிஸ்தானை சவுதி, ஓமன், குவைத், கத்தார் ஆகிய அரபு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், உக்ரைன், எகிப்து, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் பாராட்டியுள்ள நிலையில், சமாதான முயற்சி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com