காங்கிரஸ் தேர்தல் பணிக் குழு அறிவிப்பு!

Sathyamoorthi bhavan
சத்திய மூர்த்தி பவன்
Published on

பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மனுக்கள் பரிசீலனை முடிவடைந்துவிட்டது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்கெனவே ஒரு தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் துணைமேயர், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத் துறை தலைவர் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள்.

1. எம். கிறிஸ்டோபர் திலக்,

2. பெ. விஸ்வநாதன், முன்னாள் எம்.பி.,

3. மயூரா எஸ். ஜெயக்குமார்,

4. கோபிநாத் பழனியப்பன்,

5. வி.கே. அறிவழகன்,

6. ஈ.கே.பி. பாபு (எ) வெங்கடாசலம்,

7. முகம்மது ஆரீப் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com