தேர்தல் 2026

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலே தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் எனக் கூறப்படுவதால் இரு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுபற்றி கேட்டதற்கு, இராகுல்காந்தி கேரளத்தில் பிரச்சாரத்தில் இருப்பதால், தேர்தல் குழு கூடவில்லை; நாளை அல்லது மறுநாள் அக்குழு கூடி பட்டியல் அறிவிக்கப்படும்; இதற்காக நாளை நான் தில்லிக்குச் செல்கிறேன் என்று அவர் கூறினார்.