பாடகி பி.சுசீலாவுக்கு கவின்கலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்!

பாடகி பி.சுசீலாவுக்கு கவின்கலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்!

பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை - கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உட்பட்ட பல மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு, ஏற்கனவே பத்மபூஷன் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது என பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை - கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் பி.சுசீலா அம்மாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்படது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பி.சுசீலாவின் இருக்கைக்கே சென்று பட்டச்சான்றிதழை வழங்கினார்.

அதேபோல், இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்துக்கும் முதலமைச்சர் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கினார்.

பி.சுசீலா அம்மா பற்றி பி.ஜி.எஸ்.மணியன் நமது அந்திமழை இணையதளத்தில் எழுதிவரும் தொடரைப் படிக்க...!

இசையரசி -1

இசையரசி -2

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com