நீக்கப்பட்ட வாக்காளர்ளைச் சேர்க்க சிறப்பு முகாம்கள்... தேர்தல் ஆணையம் உத்தரவு!

SIR
எஸ்.ஐ.ஆர்.
Published on: 

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் புதிய வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடனான இணையவழிச் சந்திப்பின்போது, எஸ்ஐஆர் நடந்து முடிந்த மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணியின்போது நீக்கப்பட்டவர்களையும், புதிதாகச் சேர்க்க வேண்டியவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு, விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை அறியவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக வெளியான தகவல்கள், தகுதியான வாக்காளர்கள் பலர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாகவும், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com