2.89 கோடி வாக்காளர்கள் அதிரடி நீக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

2.89 கோடி வாக்காளர்கள் அதிரடி நீக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Published on

உத்தரப் பிரதேசத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலிலிருந்து சுமார் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர்பணிகளுக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரின்வா இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். மூலமாக 2.17 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில், இறந்துபோன வாக்களர்களின் 46.23 லட்சம். காணமால் போன வாக்காளர்களின் எண்ணிக்கை 25.47 லட்சம் ஆகும். மொத்தம் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் இடம்பெறாதவர்கள் படிவம் 6 -ஐ பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 6ஆம் தேதி வெளியிடப்படும் என்றார். ”என்றார்.

பிப். 6 வரை வாக்காளர்களின் உரிமைகோரல், ஆட்சேபனைகள் ஏற்கப்படும். வரைவு வாக்காளர் படிவத்தில் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ சமர்ப்பிக்குமாறு உ.பி. தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

எஸ்ஐஆருக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் 15.44 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 12.55 கோடியாகக் குறைந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com