ஜோதிமணி குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது - செல்வப்பெருந்தகை

ஜோதிமணி - செல்வப்பெருந்தகை
ஜோதிமணி - செல்வப்பெருந்தகை
Published on

"காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.” என என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் வலுத்து வருகின்றன.

"ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். வாக்குச் சாவடி முகவர்கள் எல்லா மாவட்டத்திலும் நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிமணியின்அதிகாரத்துக்குள் வரும் சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச் சாவடி முகவர்களை நியக்கும் அதிகாரத்தை அவருக்கே முழுமையாக கொடுத்துள்ளோம். ஏதோ ஒரு படிவம் விடுபட்டிருப்பதாக சொன்னார், அதையும் அனுப்பியிருக்கிறோம். கட்சியில் யார் வேலை செய்யவில்லை என்பதை ஜோதிமணி தான் விளக்க வேண்டும்.

கையில் ஐந்து விரல்களும் ஓரே மாதிரி இருப்பதில்லை; இருப்பினும் அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். அதுதான் தலைமைப்பண்பு.

சகோதரி ஜோதிமணியின் புகார் குறித்து ஏற்கெனவே மேலிடத்திற்கு தெரியப்படுத்தி உள்ளேன். மேலிடத்தில் இருந்து இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணி பதிவிட்டது ஆச்சரியமளிக்கிறது.

இந்த ட்வீட் ஏன் போட்டார் என்று தெரியவில்லை. எல்லா பணிகளையும் நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸை அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுக்கத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com