“இதற்கு முன்னால் நமக்கு இருந்த எதிரிகள் இவ்வளவு மோசமானவர்கள் இல்லை. தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது.” என்று திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியினருக்கு நடத்தப்பட்ட பயிற்சி கூட்டத்தில் ஆ. ராசா பேசியதாவது:
கடந்த ஓராண்டு காலமாக தொகுதி மறுசீரமைப்பு, எஸ்.ஐ.ஆருக்கு எதிராக முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திமுகவினர் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் ஏராளம். எதற்கு இவ்வளவு முன்னெடுப்புகள்? காரணம் வேறொன்றும் இல்லை, இதற்கு முன்னர் நமக்கு இருந்த எதிரிகள், தேர்தல் களத்தில் நாம் எதிர்த்தவர்கள் இவ்வளவு மோசம் இல்லை. தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்தது. எஸ்.ஐ.ஆர். வந்த பிறகு நாம் ஒழுங்காக இருக்கிறோம், தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது.
தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் தேர்தலை சந்திப்போம். வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகுதான் தேர்தல் சூடுபிடிக்கும். ஏனெனில் தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் இல்லை; தேர்தல் ஆணையம் திருடவில்லை. ஆனால் இன்றைக்கு தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் உள்ளனர். இந்த திருடர்களுக்கு தலைமை தாங்குபவர்கள் யார்? மோடி, அமித் ஷா என்ற பெருந்திருடர்கள் தான். இந்த பெருந்திருடர்களுக்கு முன்னால் நாம் ஜனநாயகத்தை காக்கத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.” என்றார்