அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய போர், ஜூன் மாதம் அமைதி ஒப்பந்தத்துடன் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்த அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு ஹார்முஸ் நீரிணையை ஈரான் கப்பல் போக்குவரத்திற்குத் தொடங்கியது. அதேபோல, அமெரிக்காவும் சில பொருளாதார தடைகளில் தளர்வு அளிக்க ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், நேற்று ஹார்முஸ் நீரிணையில் சென்றுக்கொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மேலும், ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்கியது.
இதையடுத்து, துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்கா-ஈரான் இடையேயான இடைக்கால ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதனால், மீண்டும் மேற்காசிய நாடுகளுக்கு இடையேயான போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
போர் எதிரொலியால், கச்சா எண்ணெய் விலை 3.2% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.